இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

ஹோலி பண்டிகை கொண்டாட தடை!

கொரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இதனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை வரும் மார்ச் 28-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடபட உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் பல மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சண்டிகர், பிகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, குஜேராத் மாநிலங்களில் ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராதில் மட்டும் ஹோலி பண்டிகையை முன்னிட்டி கொண்டாடப்படும் ஹோலிகா தஹான் பண்டிகை கொண்டாட மட்டும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இதுகுறித்து அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், 10 வயதுக்கு உட்பட்டோர் மேலும் முதியவர்கள் கூட்டமாக ஹோலி கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிகாரில், ஹோலி பண்டிகையில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிற்க வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Advertisement:

Related posts

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குடிபோதையில் படுத்து உறங்கிய திருடன்!

Jayapriya

“தொகுதி வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவேன்” : கொ.ம.தே.க வேட்பாளர் ஈஸ்வரன்

Karthick

விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!

Saravana