உலகம்

வீட்டு சிறையில் துபாய் இளவரசி; வைரலாகும் வீடியோ

துபாய் இளவரசி தான் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

துபாய் இளவரசி லத்திபா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான லத்திபா, கடந்த 2018-ம் ஆண்டு துபாயிலிருந்து தப்ப முயன்றபோது, கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், லத்திபா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், தான் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், லத்திபா உயிருடன் இருக்கிறாரா என்பதற்கு ஐக்கிய அரபு அமீரகத்திடம், ஐநா மனித உரிமை ஆணையம் ஆதாரம் கேட்டுள்ளது.

Advertisement:

Related posts

உலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!

Jayapriya

ஹேர் ஸ்ப்ரேயால் வந்த வினை: இளம் பெண் தவிப்பு!

Jayapriya

“அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்”: கிரெட்டா காட்டம்!

Nandhakumar