தமிழகம் முக்கியச் செய்திகள்

டாக்டர்.ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம்: சட்ட மசோதா தாக்கல்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு இதற்கான சட்டமசோதாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார். பின்தங்கிய மாவட்டங்களாக விழுப்புரம் திருவண்ணாமலை, கடலூர் , சிதம்பரம் உள்ளதை கருத்தில் கொண்டும், இவ்விரு மாவட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது அந்த புதிய பல்கலைக்கழகத்திற்கான சட்டமசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு கல்லுரி, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, கடலூர் மாவட்டம் பெரியார் கலைக்கல்லூரி, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாச்சலம் திருக்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கல்லூரிகள் என பத்து கல்லூரிகளை உள்ளடக்கி டாக்டர்.ஜெ. ஜெயலலிதா என்ற புதிய பல்கலைக்கழகம் செயல்பட உள்ளது

Advertisement:

Related posts

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Saravana

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை நாளை முதல்வர் வெளியீடு

Niruban Chakkaaravarthi

ஊழலின் மொத்த உருவமாக திமுக திகழ்கிறது: அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு!

Saravana

Leave a Comment