குற்றம் முக்கியச் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நாகை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகன் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி. இவர் கடந்த 2015ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிபாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு நாகை போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலியல் துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டது உறுதிப்படுத்தினார். மேலும், அந்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement:

Related posts

ஒரு குடும்பத்திற்கான கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது : நிர்மலா சீதாராமன்!

Karthick

ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்!

Jayapriya

போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

Karthick