செய்திகள்

வெற்றியைக் கொண்டாட வீதியில் திரள வேண்டாம்: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணி வெற்றி முகத்தில் இருக்கிறது, அதைக் கொண்டாடும் விதமாக வீதியில் திரளுவதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் மதியம் 2.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 147 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னலை வகித்து வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திமுக கூட்டணி வெற்றி முகத்தில் இருக்கிறது, அதைக் கொண்டாடும் விதமாக வீதியில் திரளுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர், ’திமுக கூட்டணி வெற்றிமுகம். வெற்றியைக் கொண்டாடுவதென வீதியில் திரளுவதைத் தவிர்க்கவேண்டும். சனாதனிகளைக் கொட்டமடிக்கவிடாமல் தேர்தல் களத்தில் தடுத்ததைப்போல, கொரோனாவும் இங்கே கும்மியடிக்க இடம் கொடுத்து விடக்கூடாது என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

Gayathri Venkatesan

தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் எல்.முருகன் பின்னடைவு

Karthick

முதல்வர் அலுவலகத்தில் பேரறிவாளன் மனு!

Niruban Chakkaaravarthi