செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கண்கலங்கிய முதல்வர், மன்னிப்புகோரிய ஆ.ராசா!

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோருவதாக திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆ.ராசா சமீபத்தில் திமுக தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி குறித்தும் பிரதமர் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பல அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (28/02/2021) திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, தனது தாய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி கண்ணீர் மல்க உரையாற்றினார். இதனையடுத்து ராசாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடிகள் மேலெழுந்தன.

இந்நிலையில் இன்று காலை நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த ராசா, “ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமையையும் பற்றித்தான் பேசி விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன்.முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன்.” என்று தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய அரசியல் கட்சியின் முக்கிய அரசியலாளர் ஒருவர் பெண்கள் குறித்து இவ்வாறாக பேசியிருப்பதும், அதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளதும் அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!

Jeba

மக்களவைத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்

Karthick

பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!

Saravana