தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வெற்றி சான்றிதழை அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வைத்து மரியாதை செலுத்தினார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தேர்தல் அதிகாரிகள் வெற்றி சான்றிதழை வழங்கினார்கள்.

இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை எடுத்தக்கொண்டு மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள், திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் தன்னுடைய வெற்றி சான்றிதழை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement:

Related posts

மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Ezhilarasan

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 1.14 கோடிக்கும் மேல் வாக்காளர்கள்!

Gayathri Venkatesan

அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் நம்பிக்கை!

Gayathri Venkatesan