தமது வெற்றியை விட, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேலுவின் வெற்றிதான் முக்கியம், என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டை பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி கொடுத்தார் என்றும், ஆனால், இதுவரை 15 பைசா கூட போடவில்லை என்றும், விமர்சித்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைத்திருந்த ஒரு செங்கல்லை, தான் எடுத்து வந்துவிட்டேன் என்றும், அந்த கல்லை வைப்பதற்கு 75 கோடி ரூபாய் செலவு, என அரசு ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இந்த தொகுதியில் வேலுவின் வெற்றி தம் வெற்றியைக் காட்டிலும் முக்கியம், என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement: