சாத்தியமில்லாத விஷயங்களை தேர்தல் அறிக்கையில் கூறி திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்றுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தருமபுரி வள்ளலார் திடலில், அமமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சாத்தியமில்லாத விஷயங்களை தேர்தல் அறிக்கையில் கூறி திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருகின்றன.
அமமுகவின் தேர்தல் அறிக்கைகள் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என விமர்சனம் செய்தார். திமுக தான் வெற்றிபெறும் என்கிற கருத்து கணிப்புகள் மக்களை திசை திருப்ப அக்கட்சி நிகழ்த்தும் மாயாஜாலம் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
Advertisement: