தமிழகம் முக்கியச் செய்திகள்

வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் செய்தி வெளியாகும்போது, தொண்டர்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. இந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கட்சிதான் அரிதி பெரும்பான்மையைக் கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து திமுக வெற்றிபெறும் செய்தி வெளிவரும்போது, தொண்டர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் என்றும் வெற்றிக்கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களில் யாரும் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக வெற்றியைக் கொண்டாடுவதைவிடக் கட்சியினரின் உயிரைப் பாதுகாப்பதே எனது தலையாய நோக்கம் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

கணவன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது குற்றம் என அழைக்க முடியுமா? நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் சர்ச்சை பேச்சு

Jeba

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

Gayathri Venkatesan

கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!

Jeba