செய்திகள் தமிழகம் தேர்தல் 2021

திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்

திமுக அறிவித்ததை பின்பற்றித்தான் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்கள் தங்கள் கட்சி ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஈரோடு மாவட்டத்தில் புதிதாகப் பல்கலைக்கழகம்,சட்டக்கல்லூரி,வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றும், அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

கொங்கு மண்டலம் தங்களுடையது என்று கூறும் அதிமுக கொங்கு மண்டல மக்களுக்கு பல்வேறு துரோகங்களைச் செய்துள்ளதாக என்று அவர் விமர்சித்தார். ஜிஎஸ்டி வரியால் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் நசிந்துவிட்டதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலம் விவசாயிகளுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறினார். திமுக வெளியிட்ட அறிவிப்பின் எதிரொலியாகவே பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேற்கொண்டதாகவும் என்று அவர் கூறினார்.

முன்னதாக திருச்சியிலிருந்து கரூருக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் குளித்தலை பேருந்து நிலைய பகுதியில் திடீரென இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நெடுஞ்சாலையில் நடந்தே சென்று குளித்தலை நகரில் பரப்புரை செய்தார். அப்போது, பேருந்துகளில் வந்தவர்களுடனும், நடந்து சென்றவர்களுடனும் கை குலுக்கினார்.

Advertisement:

Related posts

“தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தனிச்சிறப்பானது!” ராகுல் காந்தி புகழாரம்!

Karthick

போலி ‘பைசப்ஸ்’ அகற்ற சிக்கலான அறுவைச்சிகிச்சை!

Jeba

ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது! – ப.சிதம்பரம்

Nandhakumar