தமிழகம் தேர்தல் 2021

சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டியவர்: மாதவராவ் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ’சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைத்திருக்க வேண்டிய அரவது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்’ என்று அவர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கொரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் – சட்டமன்ற உறுப்பினராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைத்திருக்க வேண்டிய அரவது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும்- காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர் பிரகாஷ்!

Gayathri Venkatesan

வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமி

Karthick

“கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!” ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Saravana