தேர்தலுக்காக மட்டுமல்லாது எப்போதும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய கட்சி திமுக என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சிதம்பர நகரில், மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 14 வயது முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து, மக்களை கட்டி காக்க தற்போது தலைவராக வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தன்னைப்போன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், இங்கு வந்த வாக்கு கேட்க முடியுமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூத்துகுடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில், படிப்பிற்கு ஏற்றவாறு ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், திமுக அறிவித்துள்ள திட்டங்களை விளக்கி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
Advertisement: