தேர்தலில் வாக்குகளை பெற திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சாடியுள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக எதிர்கொள்ள தயாராகி வரக்கூடிய நிலையில், சென்னை கோயம்பேட்டில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், திருத்தணியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ‘வேலை’ பரிசாக வாங்கிக் கொண்ட நிலையில், மற்றொரு நிகழ்ச்சியில் கனிமொழி ‘வேலை’ வாங்க மறுத்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், வாக்குகளுக்காக திமுக இரட்டை வேடம் போடுவதையே இது உணர்த்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement: