சினிமா

ஓவைசிக்கு அழைப்பு விடுக்கவில்லை… திமுக சிறுபான்மை அமைப்பு மறுப்பு!

சிறுபான்மை பிரிவு சார்பில் நடத்தும் மாநாட்டுக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திமுக தெரிவித்துள்ளது.

நல்லாட்சி மலர இதயங்களை இணைப்போம் என்ற பெயரில் திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பாக சென்னை இராயப்பேட்டையில் வரும் 6 ஆம் தேதி அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ் டி பி ஐ ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான ஒவைசியை திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது 6 ஆம் தேதி மாநாட்டில் பங்கேற்கும்படி ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது ஒவைசி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள மமக, ஐயுஎம்எல் ஆகிய இஸ்லாமிய கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மஸ்தான், தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Saravana

முகக்கவசத்துடன் வரும் பெண் சூப்பர் ஹீரோ.. வெளியாகிறது புதிய திரைப்படம்!

Dhamotharan

ஸ்டார் வார்ஸ் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்!

Arun

Leave a Comment