தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு!

இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் முறைப்படி திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திமுக வென்றது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மூன்றாவது முறையாக வெற்றியைத் தன்வசமாக்கினார். வருகின்ற 7ஆம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இன்று திமுக எம். எல். ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொங்கியதும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மு.க ஸ்டாலினை திமுக சட்டமன்ற தலைவராக முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து அவர் நாளை ஆட்சியமைக்க ஆளுநரைச் சந்தித்து உரிமைகோர உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ கூட்டத்தில் 133 எம். ஏல்.ஏக்கள் கலந்துகொண்டனர். கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் ஆட்சியமைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

Advertisement:

Related posts

ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினார் ஜோ பைடன்!

Jayapriya

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

Ezhilarasan

முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

Jayapriya