மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார்.
பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள், கவுண்டமணி-செந்தில் வாழைப்பழம் நகைச்சுவை போல் அமைந்துள்ளதாக விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தபடும், என்றும் அவர் உறுதியளித்தார்.
மதுரையில் அவசியம் இல்லாத பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறிய ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
Advertisement: