தொழில் முதலீடுகள் தொடர்பாக அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டார்.
பல்வேறு மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போடப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதனை எதிர்த்து தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.
திமுக ஆட்சி அமைந்ததும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் எனறும், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Advertisement: