தமிழகம் முக்கியச் செய்திகள்

கடனை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் அதிமுகவின் சாதனை: மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மீண்டும் முதல்வர் அடிக்கல் நாட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், 90 லட்சம் பேர் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால், 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவி குழு பெற்ற கடன்கள், ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டம், திமுக ஆட்சியில் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் என்றும் குறிப்பிட்ட ஸ்டாலின், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடனை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியதுதான் அதிமுக அரசின் சாதனை என்றும் விமர்சித்தார்.

Advertisement:

Related posts

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!

Jayapriya

அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்

Nandhakumar

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi