அதிமுக ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், கொரோனாவால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும், இருந்த வேலைவாய்ப்புகளை, இளைஞர்கள் இழந்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
வெற்றிநடை போடுவதாக கூறும் தமிழகம், வெற்று நடை போடுவதாக சாடிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் கெத்து நடைபோடும் என்றும் கூறியுள்ளார்.
Advertisement: