தமிழகம் முக்கியச் செய்திகள்

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அரசால் செயல்படுத்த முடியாது: மு.க.ஸ்டாலின்

தேர்தல் தேதி அறிவிக்கப்போவதை அறிந்துகொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தாம்பரம் அருகே கரசங்கால் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை தமிழக அரசால் செயல்படுத்த முடியாது என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை அதிகமாக கடன் வாங்கியது மட்டும்தான் என சாடினார்.

தொடந்து, திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கத்தில் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றிட வேண்டும் என்ற அவர், ஒரே ஒரு தொகுதியைக் கூட விட்டுவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தாங்கள் தெரிவித்ததாகவும், இதை அடுத்தே மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதை அறிந்துகொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்தியதாகவும் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

Advertisement:

Related posts

திமுகவை அச்சுறுத்தவே மகள் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

L.Renuga Devi

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

Karthick

தேர்தலில் பெண்களுக்கு 33 % இடங்களை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

Jeba