தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கொளத்தூரை 234 தொகுதிகளுக்கும் மாடலாக மாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் உறுதி!

கொளத்தூர் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். மேளதாளங்கள் முழங்க அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.


அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானாக வளரும் என்பதால் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தேன்.கொளத்தூர் தொகுதிக்கு தாமதமாக வருவதற்காக என் மீது கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது புயல், மழை, வெள்ளம், இயற்கை பேரிடர் என எது வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு நேரில் வந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை விட முதலமைச்சராக இருக்கும் போது, தொகுதிக்கு பல நல்ல திட்டங்கள் வருவேன், 234 தொகுதிகளில் மாடல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை மாற்றுவேன் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.

Advertisement:

Related posts

சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்ற சிபிஎஸ்இ!

Niruban Chakkaaravarthi

8ம் தேதி பள்ளி திறப்பு; அனுமதி கடிதம் கட்டாயம்

Jayapriya

“திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்”: மமதா பானர்ஜி

Karthick