செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: முதல்வர் விமர்சனம்

அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இல்லை என்றும் திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அ.தி.மு.க கூட்டணி மக்களுக்குச் சேவை செய்யும் கூட்டணி என்றும் முதலமைச்சர் கூறினார். தி.மு.க ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது இல்லை என்பதால், பரப்புரையில் அவர்களால் அதனைக் கூற முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற 1 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்றார். மத்தியிலும், மாநிலத்திலும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்றும் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisement:

Related posts

கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

Saravana

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

Jeba

மமதா பானர்ஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ள பிஜேபி

Saravana Kumar