தமிழகம்

திமுகவில் இருந்து கூட்டணிக்கு தூது வந்தது: கமல்ஹாசன்

திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மேடையில் பேசிய அவர், திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நல்லவர்கள், மக்கள் நீதி மய்யத்தில் சேரவேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், தான் சொல்வதெல்லாம் முதலமைச்சர் செய்கிறார் எனக்கூறும் ஸ்டாலின், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடச் சொல்லுவாரா, எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டார். தூதுவிடுவதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது என்றும், கட்சி தலைமையிடம் இருந்து அழைப்பு வர வேண்டும், என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். மேலும், ரஜினிகாந்தை நட்பு ரீதியில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்த பின்னர், ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சரியா?, என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

Advertisement:

Related posts

துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை!

Karthick

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Jayapriya

எழுவர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்!

Nandhakumar