தமிழகம்

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் இரண்டாம் கட்டமாக ஊழல் புகார் பட்டியல் திமுக சார்பில் அளிக்கப்பட்டது.

அதிமுக அமைச்சர்கள் மீது திமுகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து, ஊழல் புகார்கள் அடங்கிய 97 பக்க மனுவை வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இன்று மாலையில் சென்று ஆளுநரை சந்தித்தனர். அப்போது, தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், முதல்வர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

தவறான தொடர்பு: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்!

Saravana

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை; பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய போலீசார்!

Jayapriya

மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!

Nandhakumar