ஆசிரியர் தேர்வு தமிழகம்

தேமுதிக தனித்து போட்டியா?; சர்ச்சையை கிளப்பிய எல்.கே.சுதிஷ்

தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷின் பேஸ்புக் பதிவு அரசியல் கலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரமாக துவங்கிவிட்டன. திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக, அதிமுக – தேமுதிக மூத்த நிர்வாகிகள் இடையே நேற்று நடைபெறவிருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனிடையே தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் எல்.கே.சுதிஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்பதைக் குறிக்கும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பெரம்பலூரில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனை கூட்டத்தில்
பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் எனக்கூறினார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றார்.

Advertisement:

Related posts

அஸ்வின் அபாரம்…. இங்கிலாந்து 178 ரன்களில் சுருண்டது… இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு…

Nandhakumar

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

Nandhakumar

பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்

Saravana Kumar