செய்திகள்

புதுவை 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேமுதிக புதுவையில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வேட்பாளர்களையும் முதற்கட்டமாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 16 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதியில் முதற்கட்டமாக ஏற்கெனவே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மண்ணாடிப்பட்டு, திருபுவனை(தனி) என 16 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் தேமுதிக, எதிர்வரும் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தனித்தே சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதாக சமீபத்தில் தேமுதிக அறிவித்தது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பாலினம் பாகுபாட்டால் 85% பெண்களுக்கு ஊதிய உயர்வு புறக்கணிப்பு!

Gayathri Venkatesan

திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை ஒளிப்பதிவு மூலம் உணரச் செய்தவர் கே.வி.ஆனந்த்

Karthick

“தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்

Karthick