ஆசிரியர் தேர்வு தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வருகிற 25ஆம் தேதி முதல் முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படும். பொது தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், தனி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கும், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் மகளிருக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்பட்ட விருப்பமனு விண்ணப்ப படிவங்கள் மார்ச் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:

Related posts

“கட்சியின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை”; அமைச்சர் ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

Gayathri Venkatesan

அதி வேகமாக வந்த லாரியால் நிகழ்ந்த கோர விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Nandhakumar