சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டும் தகராறில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 1வது தெருவில் இளைஞர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே கேக் வெட்டும்போது தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு இளைஞர்கள் விமல் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய விமலை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக விமலை பழி வாங்க நினைத்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
Advertisement: