தமிழகம் முக்கியச் செய்திகள்

15 பேருக்கு கொரோனா ? மதுரை விமான நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி, ஒரே நாளில் 17 ஆயிரத்து 897 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 445 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகளால் மதுரை விமான நிலையத்துக்குப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 9 விமானங்கள் மட்டுமே மதுரையில் இருந்து இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 5 நாட்களில் விமானநிலைய தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விமான நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Advertisement:

Related posts

“கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்!”: கமல்ஹாசன்

Saravana

உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் அமையும் மாநிலம் இதுதான்!

Karthick

நடிகை சுனேனாவுக்கு கொரோனா பாதிப்பு!

Karthick