இந்தியா முக்கியச் செய்திகள்

தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

தமிழகத்தில் தற்போது பட்டியலினத்தவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார்
ஆகிய 7 உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றை பிரிவின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக தமிழக அரசு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு பரிந்துரையின் பேரில், 7 உட்பிரிவுகளும் ஒரே பிரிவாக மாற்றப்பட்டாலும் பட்டியலினத்தில் தொடரும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் எப்போதும் போல வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

கடந்த பிப்ரவரி 13ம் தேதி இதுதொடர்பான சட்டமசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Advertisement:

Related posts

பரமக்குடியில் இலவசமாக மாஸ்க் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய உதவி காவல் ஆய்வாளர்!

Karthick

சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!

Jeba

மர்மநபர்கள் தள்ளிவிட்டதால் மமதா பானர்ஜி காலில் காயம்!

Jeba