தமிழகம் முக்கியச் செய்திகள்

பல்லாவரம் தேர்தல் பணிமனை திறந்து வைத்த துணை முதல்வர்!

பல்லாவரம் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனையை துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் திறந்து வைத்துள்ளார்.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பம்மல் சாலையில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அதனை தொடர்ந்து குரோம்பேட்டையில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ரிப்பன் வெட்டி பணிமனையை திறந்து வைத்தார். பணிமனையை திறக்க வருகை தந்த துணை முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், நகரமன்ற துணை தலைவர் த.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement:

Related posts

17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

Karthick

பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!

Jayapriya

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!

Saravana