முன்னாள் அதிபர் டிரம்ப்பை செனட் சபை விடுவித்ததன் மூலம் ஜனநாயகம் வலுவிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அப்போதைய அதிபர் டிரம்பை எதிர்த்து போடியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆதரவாளர்களை தூண்டி வன்முறையில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தின் மீது செனட் சபை விசாரணை செய்தது. எனினும் அவரது பதவி நீக்கத்துக்கு எதிரான குற்றசாட்டுகளில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை டிரம்ப் வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இது குறித்துப் பேசிய இப்போதைய அதிபர் ஜோ பைடன், ஜனநாயகம் வலுவிழந்து விட்டதாக கூறினார். இந்த நிலையில் செனட் சபையில் டிரம்ப் விடுவிக்கப்பட்டாலும் கூட அவர் மீது குற்றவழக்குத் தொடரப்படும் என்று கூறப்படுகிறது.
Advertisement: