இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!

டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீப்பெட்டிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகள் சேகரித்துள்ளார்.

டெல்லியின் 28 வயதான ஸ்ரேயா கதூரி அமெரிக்காவின் பாஸ்டனில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது ப்ராஜக்ட்டுக்காக முதன் முதலில் தீப்பெட்டிகளை சேகரிக்கத் தொடங்கினார்.

இப்படியாக 2013ல் தொடங்கிய ஸ்ரேயாவின் இந்த தேடல் பயணத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் தேனீர், வியாபாரக் கடைகளிலிருந்தும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வித்தியாசமான சுமார் 5 ஆயித்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டிகளை சேகரித்துள்ளார். இதில் இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் தீப்பெட்டிகளும் அடங்கியுள்ளன.

“வெவ்வேறு பகுதிகளிலிருந்து தீப்பெட்டிகளை சேகரிக்கும்போது அம்மக்களின் பழக்கவழகங்கள் மற்றும் கலச்சார வளர்ச்சியையும் அடையாளம் கான முடிகிறது” என இப்பயணம் குறித்து ஸ்ரேயா நெகிழ்சியடைந்துள்ளார். மேலும், இப்பயண தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் கூட ஆதரவளிக்கவில்லையென்றும், பின்னர் இதன் சிறப்பை உணர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்தனர் என ஸ்ரேயா கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Gayathri Venkatesan

397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!

Dhamotharan

கண்டிப்பாக ‘Agree’ கொடுக்க வேண்டும்… பரபரப்பாக பேசப்படும் வாட்ஸ் அப்பின் புதிய பிரைவசி பாலிசி!

Jayapriya