இந்தியா முக்கியச் செய்திகள்

டெல்லியில் 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு!

தலைநகர் டெல்லியில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தலைநகர் டெல்லி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றைத் தடுக்க முழுமையான பொது முடக்கத்தை அம்மாநில அரசு நடைமுறை படுத்தியுள்ளது. டெல்லியில் இரண்டு வாரத்துக்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஏராளமானோர் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். மேலும் பலர் வேலை இழக்கும் சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உள்ள ஒரு லட்சத்து 56 ஆயிரம் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல டெல்லியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 72 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

மரக்கன்றுகளை நட்டு ரசிகர்கள் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி!

Gayathri Venkatesan

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

Karthick

எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் : மு.க.ஸ்டாலின்

Ezhilarasan