சினிமா தமிழகம் முக்கியச் செய்திகள்

கர்ணனுக்கு நடுக்கடலில் கட் அவுட்; அசத்திய புதுவை ரசிகர்கள்!

புதுச்சேரியில் கர்ணன் திரைப்படத்திற்கு நடுக்கடலில் கட்அவுட் வைத்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், புதுச்சேரியில் தனுஷ் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு வித்தியாசமான வரவேற்பை கொடுத்து அசத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் கடலில் கர்ணன் திரைப்பட கட்அவுட் வைத்து தனுஷ் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து அசத்தியுள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் நாளை வெளியிடப்படுகிறது. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து மாரி இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளிவர இருக்கும் கரணன் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

தேர்தலுக்காக மட்டுமல்லாது எப்போதும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய கட்சி திமுக: ஸ்டாலின்!

Saravana Kumar

அசாம், மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்

Gayathri Venkatesan