குற்றம் செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

கடலூர் ரவுடி கொலை வழக்கில் மற்றொரு ரவுடி என்கவுண்டர்!

கடலூர் அருகே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கின் கைது நடவடிக்கையின்போது மற்றொரு ரவுடி ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா என்கிற வீராங்கையன். பிரபல ரவுடியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

வீரா, கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தன் வியாபாரத்தை முடித்த அவர், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது வீட்டின் அருகே சென்ற வீராவை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த பத்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது.

கொடூரமாக வெட்டியும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், வீராவின் தலையை துண்டாக வெட்டி ஒரு பையில் போட்டுக்கொண்டு உடலை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் வீராவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில், வீராவை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு மோப்பநாய் கூப்பர் உதவியுடன் குப்பன்குளம் பகுதியில் கிடந்த வீராவின் தலையை கண்டெடுத்தனர்.

இக்கொலைக்கு காரணமானவர்களை தேடி வந்த போலீசார், புதுப்பேட்டை மலட்டாற்றில் ஐந்து பேரை சுற்றி வளைத்தனர். அப்போது கிருஷ்ணா என்பவர் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் தீபனுக்கு கை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து தன்னை தற்காத்துக்கொள்ளவே கிருஷ்ணாவை என்கவுண்டர் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர் தீபனையும் ரவுடி கிருஷ்ணாவையும் மீட்ட காவல்துறையினர், அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement:

Related posts

விரைவில் மாமனிதன்… இயக்குநர் சீனுராமசாமி

Niruban Chakkaaravarthi

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை; பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய போலீசார்!

Jayapriya

”நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே குறிக்கோள்”- கமல்ஹாசன்!

Jayapriya

Leave a Comment