செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் பாஜக சார்பில் பூண்டி வெங்கடேசன் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டி பகுதியில், அவருக்கு ஆதரவாக பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, வழிநெடுகிலும், பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பரப்புரையில் பேசிய சி.டி.ரவி, திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்கள் பறிபோகும் என குறிப்பிட்டார். வருகிற சட்டபேரவை தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement:

Related posts

சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!

Jeba

அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!

L.Renuga Devi

கொரோனா ஊரடங்கு: கோடீஸ்வரர்கள் சொத்து உயர்வு, லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!

Saravana