முக்கியச் செய்திகள் விளையாட்டு

அரை சதம் அடித்து அசத்திய ரெய்னா; டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், பாப் டுபிளிஸ்சிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அவர்களையடுத்து களமிறங்கிய மொயீன் அலியும், சுரேஷ் ரெய்னாவும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மொயீன் அலி 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரையடுத்து, அம்பத்தி ராயுடு ரெய்னாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்கும்போது அம்பத்தி ராயுடு 23 ரன்னிலும் அவரையடுத்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் ரெய்னாவும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி கேப்டன் தோனி ரன் ஏதும் அடிக்காமல் அவுட்டாகி ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டு இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் சாம் கரன் 34 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ரவிந்திர ஜடேஜா 26 ரன்களுடன் அவுட்டாகமல் களத்தில் இருந்தார்.

Advertisement:

Related posts

மாஸ்க் அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த கனடா யூடியூபர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Saravana Kumar

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

Sathis

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்!

Ezhilarasan