இந்தியா

நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதன்முதலாக பெண்கள் சேர்ப்பு..

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவான கோப்ரா படை பிரிவில், முதன்முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில், வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகள், கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, கோப்ரா என்ற படைபிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தற்போது, முதன்முறையாக பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண் கமாண்டோக்களை போல, இவர்களும் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அடுத்த 3 மாதங்களுக்கு பெண் கமாண்டோக்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பணிக்கு அனுப்பப்படுவார்கள் என ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஏபி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

நகர்புறங்களில் 1.1 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

Saravana

பிரிட்டன் விமானங்களுக்கான போக்குவரத்துத் தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு!

Saravana

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா!

Niruban Chakkaaravarthi

Leave a Comment