செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்!

திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள் ளது. திமுக தனித்து 132 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திமுக கூட்டணி 158 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமுக, விசிக கட்சிகள் தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக் கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியாகி இருப் பதை அடுத்து, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, திமுக. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி, திருப்பூர் வடக்கு, பவானிசாகர், சிவகங்கை, வால்பாறை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், திருத்துறைப் பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து, தளி தொகுதியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்ட நாகை மாலியும் கந்தர்வக்கோட்டையில் போட்டியிட்ட சின்னத்துரையும் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement:

Related posts

மூச்சு திணறும் இந்தியா; மத்திய அரசின் புதிய யுக்தி!

Jeba

முதல் முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின்!

Ezhilarasan

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya