இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி வரை 15க்கும் கீழ் இருந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த நான்கு நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 81 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் 62 நபர்களுக்கும், காரைக்காலில் 12 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என 81 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த யூனியன் பிரதேசம் முழுவதும் தற்போது 276 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 39,251 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 674 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,201 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6,49,639 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல 35,595 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

Nandhakumar

“பொள்ளாச்சி தனி மாவட்டமாக மாற்றப்படும்” – டிடிவி.தினகரன்!

Karthick

“காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது” – கபில் சிபல் விமர்சனம்

Saravana Kumar