தமிழகம் முக்கியச் செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்: சென்னையில் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,276  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் ஆயிரத்தைக் கடந்து பாதிப்பு எண்ணிக்கை பதிவானது.

இதனிடையே கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது  தமிழக அரசு. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து, பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதியளிக்கப்படும், நின்றுகொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. 

இந்த நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகளும் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்பொழுது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இதனால் பொதுமக்கள் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக நாளையில் இருந்து  300 முதல் 400 பேருந்துகள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் அரசு  விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டுமெனவும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  வலியுறுத்தியுள்ளார். 

Advertisement:

Related posts

ஜோ பைடனின் பதவி காலம் வெற்றிக்கரமாக அமைய கடவுளை பிராத்திக்கிறேன்; அதிபர் ட்ரம்ப் கருத்து!

Saravana

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

Nandhakumar

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!

Jeba