தமிழகம் முக்கியச் செய்திகள்

பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமி

 வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்தால்தான் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர், அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 அவ்வாறு கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, 45 வயதுக்கு மேற்பட்ட, தகுதியுடடைய அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:

Related posts

அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!

Jeba

பென்னிகுவிக் பிறந்த தினம்: ஓபிஎஸ் மரியாதை

Niruban Chakkaaravarthi

ராஜஸ்தானில் புதிய பிரச்சனையாக உருவெடுத்த பறவைக் காய்ச்சல்!

Jayapriya