உலக அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையாத நிலையில், உலக அளவில் 10 கோடியே 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 24 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், 8 கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை குறையாத நிலையில், நேற்று புதிதாக 64 ஆயிரத்து 297 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும், 1,111 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று புதிதாக 12 ஆயிரத்து 194 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும், 91 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11 ஆயிரத்து 106 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் சதவீதத்தில் இந்திய முதலிடத்தில் உள்ளது.
Advertisement: