உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

குறிப்பிட்ட பருவக்காலத்தில் ஏற்படும் தொற்றாக கோவிட் -19 மாற வாய்ப்பு: ஐநா

பல காலங்களுக்கு கோவிட் நீடித்தால் அது குறிப்பிட்ட பருவக்காலத்தில் ஏற்படும் நோய்தொற்றாக மாற வாய்ப்புள்ளது என்று ஐநா எச்சரித்துள்ளது.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் பகுதியில் பரவத்தொடங்கிய கோவிட்- 19 நோய் தொற்றுக்கு சர்வதேச அளவில் 27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து உலக நாடுகள் கோவிட் -19 வைரஸ் பற்றியும் வைரஸ் எப்படி பரவுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலுக்கு வானிலை காரணிகள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது தொடர்பாக ஐநா ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.


16 பேர் கொண்ட இக்குழு சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ”வானிலை காரணிகளுக்கும் பரவல் உச்சத்தை அடைவதற்கும் தொடர்பு இருக்கலாம். சில நாடுகளில் கொரோனா குளிர் காலத்தில் உச்சத்தை அடைகிறது. சில நாடுகளில் வெயில் காலத்தில் கொரோனா உச்சத்தை அடைகிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து பார்க்கும்போது கொரோனா பல ஆண்டுகளுக்கு நீடித்தால், அவை குறிப்பிட்ட பருவக்காலத்தில் மட்டும் ஏற்படும் தொற்றாக இருக்கும். கொரோனா ஏற்படுவதற்கும் பரவலுக்கும் காற்று மாசுபாடு ஒரு முக்கிய காரணமாக இல்லை. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் காற்று மாசுபாட்டினால் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.” இவ்வாறு இக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

Advertisement:

Related posts

சட்டமன்றத்தில் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ!

Saravana Kumar

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நல்லடக்கம்!

Karthick

பிரித்வி ஷா, ஷிகர் தவான் அதிரடி; சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி!

Saravana Kumar