உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் மக்களிடையே கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மே மாதம் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வரும் பண்டிகைகளின் காரணத்தினால் மக்கள் கூடுவதை தவிர்க்கவும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காசியாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள உத்தரபிரதேச பகுதிகளில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,05,655 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் அம்மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
Advertisement: