கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 59,118 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,46,652 ஆக உள்ளது. தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை 1,12,64,637 பேர் குணமாகி உள்ளனர். தற்போது வரை 4 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் இதுவரை 12.54 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,992 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் 5,504 பஞ்சாபில் 2,661, சட்டீஷ்கர் 2,419, கேரளா 1,989 பேர், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 1,770 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement: