இந்தியா முக்கியச் செய்திகள்

கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 3,82,315 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்திய அளவில் 2,06,65,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2,26,188 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தில் மட்டும் 3,38,439 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 1,69,51,731 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது நாடுமுழுவதிலும் 34,87,229 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisement:

Related posts

சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர்களை கண்ணியதுடன் நடத்த வேண்டும்: டிஜிபி திரிபாதி!

Ezhilarasan

கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

Jeba

உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

L.Renuga Devi