இந்தியா முக்கியச் செய்திகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த அவர், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

10 மாவட்டங்களில் பிரமாண்ட சந்தை: முதல்வர் அறிவிப்பு!

Ezhilarasan

இன்று பதவியேற்கின்றனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்… விழாக்கோலம் பூண்டுள்ள அமெரிக்கா!

Saravana

புயல், மழைவெள்ளப் பாதிப்பு: புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு!

Dhamotharan

Leave a Comment